இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

முதல் சர்வதேச T 20 - இலங்கை வெற்றி

E-mail அச்செடுக்க

சங்ககாராஇந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான நாக்பூர் விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச 20 ஓவர்  போட்டியில் இலங்கை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணி இலங்கையை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெயசூர்யா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் சங்ககரா 37 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். தில்ஷான் 34 ரன்களும் , ஜெயவர்தனே 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கபுகேதரா 47 ரன்களும், மேத்யூஸ் 15 ரன்களும் விரைவாக குவித்தனர்.  இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. தொடக்க வீரர்கள் காம்பிர் ௫௫ ரன்களும் , சேவாக் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் தோனி , யுவராஜ் சிங் , ரோஹித் ஷர்மா , யூசுப் பதான் போன்ற முன்னணி வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ரெய்னா 21 ரன்களும் பந்து வீச்சாளர்கள் டிண்டா 19 ரன்களும் , நெஹ்ரா 22 ரன்களும் , ஓஹ்ஜா 10 ரன்களும் எடுத்தனர். சங்ககரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்