இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஹவுராவில் கலவரம்: 150 கடைகள், வீடுகள் தீக்கிரை!

E-mail அச்செடுக்க
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருவேறு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தை அடுத்து சுமார் 150 வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹவுரா மாவட்டம் மணிக்பீர் பகுதியில் இரு பிரிவினருக்கிடையே சிறிய அளவிலான பிரச்சனை கலவரமாக வெடித்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் அமைந்துள்ள கட்டடங்களை கலவரக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்தக் கலவரத்தில் தொடர்புடைய பிரிவினர் எவர் என்பதை காவல்துறையினர் வெளியிடவில்லை. இதுதொடர்பாக 12 பேரை கைது கொய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தீ அடுத்தடுத்த கட்டடங்களுக்குப் பரவியதை அடுத்து ஏழு தீயணைப்பு வாகணங்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.

இந்தப் பகுதியில் 144 சட்டப்பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத் தடுப்புப் படை ரோந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்