கல்வித் துறை அலுவலகத்தில் பணிபுரியும் குமஸ்தா ஒருவருக்குச் சொந்தமாக ஒரு பங்களா, ஒரு 'ஷாப்பிங் காம்ளக்ஸ்' உள்ளது. இது தவிர இவர் தனது மனைவியை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடச் செய்துள்ளார்.இன்னொருவருக்குச் சொந்தமாக மூன்று பங்களா, 6 கார்கள். இவை அனைத்தும் தன்னுடைய உறவினர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரண்டு வருடங்களுக்கு முன் மருத்துவ இலாகாவில் பணியில் சேர்ந்தவருக்கு நகரத்தின் முக்கியமான இடத்தில் ஒரு கோடி மதிப்பிலான பங்களா.
என்ன, இதற்கே தலை சுற்றுகிறதா? இதுபோல 364 'குமஸ்தா'க்களை அடையாளம் கண்டுள்ளது லஞ்ச ஒழிப்பு துறை. இவை அனைத்தும் உத்திரப் பிரதேச மாநிலம் 'லக்னோ'வில் மட்டும்.
ஒரு நகரத்திலே மட்டும் இவ்வளவு பேர் என்றால், மொத்த மாநிலத்தில் எத்தனை பேர்? நாட்டில் எத்தனை பேர்? கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து சிந்தித்தால் சிந்திப்பவர்களுக்கு மாரடைப்பு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.
இந்த பட்டியலில் வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டுத் துறையில் பணிபுரியும் 131 பேர், கிராம வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் பாஞ்சாயத்து ராஜ் ஆகிய அனைத்து துறையிலும் உள்ளனர் என்று உத்திரப் பிரதேச இலஞ்ச ஒழிப்பு துறையினர் கூறுகின்றனர்.
பட்டியலைத் தாயார் செய்து வைத்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளின் 'பச்சை கொடி' க்காகக் காத்திருக்கிறார். மக்கள் பணத்தை 'ஸ்வாகா' செய்து வாழும் கோடிஸ்வர குமஸ்தாக்கள் தற்போது பீதியுடன் காணப்படுகின்றனர்.
இலஞ்ச ஒழிப்புத் துறை உத்திரப் பிரதேசத்தில் நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டு அத்துடன் நின்றுவிடாமல் நாடு முழுவதும் இத்தகைய நடவடிக்கையை எடுக்குமா? என்பதுதான் இந்தியர்களின் எதிர்பார்ப்பு.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

எழுதியவர்: PEYAR SOLLA ACHCHAM, December 26, 2009
அவர்களின் மேலுள்ள அதிகாரிகளுக்கு கோடியா? இல்லை நூறு கோடியா? இந்திய மேலாண்மை சேவை ( I A S ) அதிகாரியாக இருந்தால் அவர் மீது வழக்கு தொடர அரசு அனுமதி வழங்காது. ஆகவே, ஒருவரும் வழக்கு இல்லாமல் தப்பிக் கொள்வர். மது கோடா இவ்வளவு கோடிகளை எப்படி சுருட்டினார்? அவருக்கு வழி காட்டிய அதிகாரிகள் யார்? யார்
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




