இந்தியாவின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் தகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்கும் சக்தி அக்கட்சிக்கே உண்டு என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 125ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.நாடு தற்போது தீவிரவாதம், வகுப்புவாதம், நக்சல் பிரச்சனை, பிரிவினைவாதம் போன்ற பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து எண்ணங்களையும், அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்வதன் மூலமே இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். காங்கிரஸ் கட்சி இத்தகைய நடைமுறையையே கையாண்டு வருகிறது. ஒருமைப்பாடே கட்சியின் கொள்கை. மக்களைப் பிரிப்பது அல்ல. பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணமுடியும் என்று நாம் நம்புகிறோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்தியாவின் நிலைத்தன்மை காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையது. காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்தால், நாடும் பலவீனமடையும். உலகின் மிகப்பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்பிக்கையிழந்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி நம்பிக்கை ஏற்படுத்தி கட்சி என்றும் அவர் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




