புதர்ச் செடிகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை பிசினான 'மைர்'ஹ்' இருதய ஆரோக்கியத்திற்கு உகந்தது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஏசு பிறந்த போது அவரை கிழக்கு தேசத்தின் மூன்று ராஜாக்கள் வந்து சந்தித்து ஏசுவுக்கு தங்கம் மற்றும் 'மைர்'ஹ்' தந்துள்ளதாக கிருஸ்துவ வரலாறு கூறுகிறது.
'மைர்'ஹ்' இதுவரை நறுமனப் பொருட்களிலும், ஊதுபத்திகளிலும், பிணத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்கவும் பயன்பட்டு வந்தது. ஆனால் இது நாம் உட்கொள்ளும் உணவுகளில் இருந்து ஏற்படும் 'கொலஸ்ட்ரால்' குறைத்து இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.
இந்த வெளுப்பு நிற பிசின் காமிஃவோரா (Commiphora) மற்றும் பால்ஸமொடென்ரான் (Balsamodendron ) என்னும் புதர்ச் செடிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது அரபு நாடுகளிலும், எதியோப்பியாவிலும் அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும் அரபு நாடுகளில் 'ஊத்' என்னும் நறுமன வஸ்துக்களில் சர்வசாதாரனமாக பயன்படுத்துகிறது.
இறந்தவர்களின் உடலில் துர் வாடை வீசாமல் இருக்க பயன்படுத்தும் ஊதுபத்திகளில் தான் இது அதிகம் பயன்படுத்தி வந்துள்ளது ஆனால் இப்போது இது உயிரை காக்கவும் பயன்படுத்தலாம்.
இந்த தகவல்களை சர்வதேச உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து, பொது நலம் என்னும் ஆராய்ச்சி கட்டுரையில் கூறியுள்ள திரு. நதியா சாலிஹ் அல் அமுதி, சவுதி அரேபியாவில் கிங் அப்த் அல் அஜீஸ் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். மேலும் 'மயிராஹ்' வறட்டுத் தொண்டை, வெட்டுக்காயம் மற்றும் தீக்காயம் ஆகியவற்றை குணப்படுத்த கூடிய நிவாரணியாகவும் பயன்படுத்த வல்லது என்று அவர் கூறியுள்ளார்.
சாம்பிராணி போன்ற இந்தப் பொருளை தமிழகத்தின் சில பகுதிகளில் குந்துரிக்கம் என்று கூறுவர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




