இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

2010 ஆண்டின் சூரிய கிரகணம்

E-mail அச்செடுக்க

அடுத்த‌ வ‌ருட‌த்தின் சூரிய‌ கிர‌க‌ண‌ம் வ‌ரும் ஜ‌ன‌வ‌ரி 15ஆம் தேதி. இது பூமியின் பரிமாண ரேகை 0.9190ல் தோன்றுவ‌தால்,  ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, வ‌ளைகுடா, ஆசியாவில் ப‌ல‌ ப‌குதிக‌ளில் தோற்ற‌ம‌ளிக்கும்.

 


ஜ‌ன‌வ‌ரி 15ஆம் தேதி சர்வதேச‌ நேர‌ம்(IST) 13.20க்கு இந்தியாவின் த‌மிழ் நாட்டில் பாம்ப‌ன் தீவுக‌ளில் உள்ள‌ த‌னுஷ்கோடியில் இது  தோன்றும் . ராமேஸ்வ‌ர‌த்தில் இருந்து 18 கி.மீ. தென்கிழக்கிலும், இல‌ங்கை மன்னார் திவுக‌ளியிலுருந்து 18 கி.மீ. மேற்கிலும் தோன்றும்.

உக‌ன்டாவில் ஆர‌ம்பித்து, நைபீரியாவின் வ‌ழியாக‌ இந்திய‌ பெருங்க‌ட‌லில் பயணிக்கும்  போதுதான் அதிக‌ள‌வில் தோன்றும். அடுத்து மால‌த்தீவில் 10.8 நிமிட‌ங்க‌ள் தோன்றும் பின்பு பாம்ப‌ன் தீவுக‌ளில் உள்ள‌ த‌னுஷ்கோடியில் இது  தோன்றும். இந்த‌ சூரிய‌ கிர‌க‌ண‌ம் தோன்றும் ஒரே நில‌ப்ப‌குதி இதுதான். மேலும் இல‌ங்கை டெஃப்த் தீவுக‌ளுக்குள் சென்று ஜ‌ஃப்னாவில் வெளியேறும். அடுத்து ப‌ர்மா, சீனா எல்லைக‌ளில் முடிவ‌டையும்.

த‌மிழ்நாட்டில் த‌னுஷ்கோடியில் தோன்றும் நேர‌ம் க‌ட‌லூர், நெய்வேலி, ஈரோடு, கொடைக்கான‌ல், ம‌துரை ஆகிய‌ இட‌ங்க‌ளில் அத‌ன் நிழ‌ல் தோன்ற‌ வாய்ப்புள்ள‌து.

சூரிய‌ கிர‌க‌ண‌ம் ப‌ற்றிய‌ க‌ட்டுக்க‌தைக‌ளும், மூட‌ ந‌ம்பிக்கைக‌ளும் இந்தியாவில் அதிக‌ம் இருப்ப‌தால் ம‌க்க‌ள் ம‌த்தியில் சூரிய‌ கிர‌க‌ண‌த்தை காண‌ ஆர்வ‌ம் அதிக‌முள்ள‌து. சூரய‌ கிர‌க‌ண‌த்தின் முக்கிய‌ ப‌குதியான் மோதிர‌ வ‌டிவ‌ சூரிய‌னை காண  புகைப்ப‌ட‌க‌லைஞ‌ர்க‌ள், ஆராய்ச்சியாள‌ர்க‌ள், ஆர்வ‌ல‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌திலிருந்து ஒன்றுகூடி ப‌டையெடுக்க தொட‌ங்க‌ ஆர‌ம்பித்துவிட்ட‌ன‌ர்.
 
இந்த‌ சூரிய‌கிர‌க‌ண‌த்தை ப‌ற்றிய‌ எல்லா த‌க‌வ‌ல்க‌ளும் தெரிந்து கொள்ள‌ பின்வ‌ரும் நாஸா சிற‌ப்பு இணைய ‌த‌ள‌த்தை காண‌லாம்.
 
http://eclipse.gsfc.nasa.gov/SEmono/ASE2010/ASE2010.html

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்