இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம் - சபாநாயகர் தேர்தல் காங்கிரஸ் போட்டி

E-mail அச்செடுக்க

ரேணுகாச்சார்யாவை அமைச்சராக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 57 பாஜக எம்.எல்.ஏ க்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் நாளை அங்கு சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் அமைச்சராக பதவி ஏற்றதையடுத்து  சபாநாயகர் பதவி காலியாக உள்ளது.

 

கர்நாடக முதல்வர் எடியூரப்பா துணை சபாநாயகர்   கே.ஜி. போபையாவை சபாநாயகராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியும் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சபாநாயகர் தேர்தல் சூடு பிடித்துள்ளது.

இதற்கிடையே தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் சபாநாயகர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பச்சுர் ரஞ்சன் தலைமையிலான எம்.எல்.ஏ க்கள்  மிரட்டல் விடுத்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அப்பச்சுர் ரஞ்சன் எங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து விட்டோம் . நாங்கள் எங்களுக்காக எதையும் கேட்க வில்லை கட்சியின் நலன் கருதியே ரேணுகாச்சார்யாவை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்