நமது ரயில்வே அமைச்சர் ஆட்டோவில் விமான நிலையத்துக்கு சென்றார். அரசின் சிக்கன நடவடிக்கையால் அல்ல. டிராபிக் சிக்கலால்...
ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று (28.12.2009) மாலை டெல்லி செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். மாலை 5.00 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணம் செல்ல வேண்டி இருந்தது. விமான நிலையம் செல்லும் வழியில் நடைபெற்ற முஹர்ரம் ஊர்வலம் காரணமாக டிராபிக் ஜாம்!. மணியோ 4.15 ஆகி விட்டது. சற்று நேரம் காத்திருந்தவர், சட்டென காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார். இவரைப் பார்த்ததும் பக்கத்திலிருந்த கட்சிக்காரர்கள் ஆட்டோவில் அவரை ஏற்றி விட்டனர். பின்னர் ஆட்டோவில் 5 மணிக்கு முன்பாக விமான நிலையம் சென்றார்.
ஆனால் அவர் சரியான நேரத்துக்கு சென்று விட்டாலும் விமானம் 55 நிமிடம் தாமதமாகத்தான் கிளம்பியது. காரணம் - விமானியும் டிராபிக் ஜாமில் சிக்கி கொண்டாராம் !!!!

| < முந்தையது | அடுத்தது > |
|---|




