இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தெலுங்கானாவை எதிர்க்கும் நடிகர்கள் ஐதராபாத்தை விட்டு வெளியேற வேண்டும்

E-mail அச்செடுக்க

தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு விட்டு சந்திரசேகர ராவின் உண்ணாவிரதத்தை நிறுத்தினாலும் ஒன்றுபட்ட ஆந்திராவுக்கான போராட்டங்கள் தொடர்ந்தன. பின் அதை சமாதானப்படுத்த சிதம்பரம் இன்னொரு அறிக்கை விட மீண்டும் தெலுங்கானா ஆதரவு போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆந்திராவை பிரித்து  தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி சந்திரசேகர ராவ் கட்சியுடன் தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இச்சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி ஜீவன் ரெட்டி தெலுங்கானா தனி மாநிலத்திற்கு தற்போது ஐதராபாத்தில் தங்கி உள்ள நடிகர்கள், நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. தெலுங்கானாவை ஆதரிக்காத நடிகர், நடிகைகளுக்கு ஐதராபாத்தில் இடம் கிடையாது. அவர்கள் உடனடியாக ஐதராபாத்தை விட்டு வெளியேற வில்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அவர்கள் தங்களுக்கு தெரிந்த தொழிலை மட்டும் பார்க்கட்டும். நடிகர்கள் தெலுங்கானா பற்றி தொடர்ந்து விமர்சித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள் என்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ஐதராபாத் தெலுங்கானா பகுதியில் இருந்தாலும் அங்குள்ள பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் என பலரும் ராயலசீமா மற்றும் இதர பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் தனி மாநிலம் உருவாகுவதை விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்