டிஸ்கொதே எனப்படும் குடித்துவிட்டு போதையில் தள்ளாட்டம் போடும் இடங்களில் போதை பொருட்கள் விநியோகம் அதிகம் நடைபெறுகிறது. அதில் பணக்காரர்களின் நடமாட்டமும், வீட்டில் பெற்றோர்களால் தண்ணீர் தெளித்து விடப்பட்டவர்களும், ஒழுக்கம், கற்பு பற்றி கவலைப்படாத இளவட்டங்களும் அதிகம் சேர்வதால் மாஃபியா கும்பலுக்கு போதை பொருட்கள் வியாபாரம் சுடச்சுட நடக்கும் இடங்களாக கூத்தாட்ட விடுதிகளும், மது அருந்தும் பார்களும் இருக்கின்றன. இங்கு சினிமா புள்ளிகள், அரசியல் வாரிசுகள், தொழிலதிபர்கள் போன்ற முக்கியப் புள்ளிகள் அதிகம் படையெடுப்பதால் இருட்டில் நடக்கும் அசிங்கங்கள் அதிகம் வெளிவருவது இல்லை.பெரும்பாலோனர் இரவில் புது வருட கொண்டாட்டத்தைக் குடித்துவிட்டும், சட்ட மீறலை பொருட்படுத்தாமலும் சீர்கேடான வழியில் கொண்டாடுவதால் காவல்துறையினருக்கு புதுவருடங்கள் தலைவலியுடனே தொடங்குகிறது.
மும்பையில் பொது இடத்தில் இது போன்ற நிகழ்ச்சியில் ஒரு பெண்னை நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் ஆடையை உருவி நிர்வாணமாக ஓடவிட்டது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்த இரண்டு புது வருட கொண்டாடத்தின் போது மும்பையில் நடைபெற்றது.
சில வருடங்களுக்கு முன் சென்னையில் பிரபல ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற ஆட்டத்தில் நீச்சல் குளம் மேல் இருந்த மேடையில் அளவுக்கு அதிகமான ஆண்களும், பெண்களும் குடித்து விட்டு ஆட்டம் போட்டதில் மேடை சரிந்து அனைவரும் நிச்சல் குளத்தில் விழுந்து விபத்துக்கு ஆளானார்கள். அதில் ஒரு இளம் பொறியாளர் மரணமடைந்தார்.
இவற்றை மறைமுகமாக கண்கானித்து வரும் காவல்துறையினர் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி போதை கும்பலை மடக்கிப் பிடிக்கிறார்கள். அடுத்து வரும் புது வருடக் கொண்டாட்டத்திலும் இவ்வாறு புதிய உத்திகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.
பொது இடத்தில் வியாபரம் நடைபெற்றால் காவல்துறையின் கெடுபுடி அதிகமாக இருக்கும் என்பதால், மாஃபியா கும்பல்கள் கடற்கரைச் சாலைகளில் பங்களாக்களை வாடக்கைக்கு எடுத்து அதில் கூத்தாட்ட பார்டிகள் நடத்துகிறார்கள். இது தனியார் இடங்கள் மேலும் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருப்பதால், காவல் துறையினர் எளிதாக உள்ளே வர முடியாது. இதுபோன்ற இடங்களுக்கு கல்லூரி மாண்வர்கள், கார்ப்பரேட், ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு எஸ்.எம்.எஸ். மூலமோ அல்லது இமெயில் மூலமோ அழைப்பு விடுக்கிறார்கள்.
காவல்துறையும் இவற்றில் ஊடுருவி மோப்பமிடத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபடியாய் சமுக அமைப்பு இணைய தளத்தில் ஊடுருவி அதிக அளவில் தகவலகள் சேகரித்து வருகிறது. மும்பை மற்றும் புனேவில் அதிகளவில் இக்குற்றங்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
உலக மயமாக்கலில் இந்திய நாகரீகத்தைத் தொலைத்த அரசு, வழக்கம் போல் பிரச்சனையின் காரணத்தை ஆராயாமல் விளைவுகளுக்கு நடவடிக்கை எடுத்து வருவது வேதனைப்பட வேண்டிய ஒன்று.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




