இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (13-01-2010)

E-mail அச்செடுக்க

 

 

 

தெலுங்கானா - ஈழம் ஒப்பிடுக. - கபிலன்

இரண்டுமே பிரிவினை மூலம் ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒற்றுமைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

முன்னது மாநிலத்தைப் பிரிப்பது. இதற்கு பன்னாட்டு ஆதரவோ ஒப்புதலோ தேவையில்லை. மற்றது நாட்டைப் பிரிப்பது. இதற்கு பன்னாட்டு ஆதரவும் ஒப்புதலும் தேவை.

வளர்ச்சிப் பணிகளில் தொடர்ந்து ஒரு பகுதி புறக்கணிகப்பட்டு வந்தால் இதுபோன்ற பிரிவினை கோரிக்கைகளைத் தவிர்க்க இயலாது.



இந்தியப் பிரதமர்களிலேயே சாதனைப் பிரதமராகத் தாங்கள் கருதுவது யாரை? - அழகப்பன்


ஜவகர்லால் நேரு!

மக்களாட்சியைப் பற்றி அறிந்திருக்காத இந்தியாவின் முதல் பிரதமர்.

பல்வேறு தேசிய அடையாளங்களாகப் பிரிந்திருந்த மக்களை ஒன்றிணைப்பது மிகப்பெரும் சவால்.

மட்டுமின்றி இந்தியா பாகிஸ்தான் என இருநாடுகளாகப் பிரிவினை ஏற்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப், டில்லி, மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருந்த வன்முறைகளைக் களையும் முகமாய் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த அகதிகளையும், இந்திய முஸ்லிம் தலைவர்களையும் சந்தித்து அமைதி ஏற்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது,

முதலாளித்துவமும் சோலிசமும் கலந்த புதிய பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்தது,

வெளிநாட்டு உறவு,

கல்வி போன்ற துறைகளில் அவர் அன்று எடுத்த முடிவுகளே இந்தியாவின் தற்போதைய வளர்ச்சிக்கான காரணம்.



முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் என்ன ஆனார்? - அதிரை அழகன்

சுமார் 11 மாதங்கள் மட்டுமே பிரதமராகப் பதவி வகித்த ஐ.கே. குஜ்ரால் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1999ஆம் ஆண்டில் நடைபெற்றத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.




ஏழைகளைப் பாதிக்காத உலகப் பொருளாதார மந்தநிலை குறித்து வணங்காமுடி என்ன நினைக்கிறார்? - ஆபிரகாம்


பொருளாதார மந்தநிலை பழைய ஏழைகளை பாதிக்காதிருந்திருக்கலாம்.

ஆனால் இலட்சக்கணக்கான புதிய ஏழைகளை உருவாக்கியிருக்கிறது.




வணங்காமுடி சார், இணையத்தில் விளம்பரங்களை கிளிக் செய்து டாலர் சம்பாதிக்கிறார்கள். இது முற்றிலும் உண்மையா? இதை நம்பி முயற்சி மேற்கொள்ளலாமா? உதாரணத்திற்கு http://www.shafinew.blogspot.com - shafihitayetullah udden


There's no such thing as a free lunch என்ற ஆங்கில சொலவடையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

இந்த இணையத் தளங்களும் இந்த விதி பொருந்தும்.

இத்தளங்களில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்வதால் டாலர்கள் இலவசமாக கிடைப்பது போல தோன்றினாலும், அவற்றை கிளிக் செய்து குறிப்பிட்ட வினாடிகளுக்கு அந்த விளம்பரங்களை படிக்க நீங்கள் செலவிடும் நேரத்திற்கான விலை அது!

பில் கேட்ஸ் ஒரு வினாடிக்கு 250 டாலர் சம்பாதிக்கிறாராம்.

உங்களின் ஒரு வினாடியின் மதிப்பு என்ன?



கிரிக்கெட்டில்,5 நாள் விளையாடும் ஆட்டத்தை ஏன் டெஸ்ட் போட்டி என்று அழைக்கிறார்கள்? - சத்யா


ஒரு அணியின் தகுதி மற்றும் வலிமையை தொடர் ஆட்டங்களின் மூலம் சோதனை செய்யும் போட்டி என்ற அடிப்படையிலேயே டெஸ்ட் போட்டி என்ற பெயர் வந்திருக்கக் கூடும்.

இங்கிலாந்து அணி 1861 மற்றும் 1862 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிய ஆட்டமே முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆகும். ஆனால் இதனை டெஸ்ட் போட்டி என்று தற்போது ஏற்றுக் கொள்வதில்லை.

1877ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியே முதல் டெஸ்ட் போட்டியாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது.

ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டங்களின் அறிமுகத்திற்குப் பின் ஆதரவை இழந்து வரும் டெஸ்ட் போட்டிகளை மீண்டும் ரசிகர்களிடையே பிரபலப்படுத்தும் வகையில் டெஸ்ட் போட்டியையும் பகல் - இரவு ஆட்டமாக அறிமுகப்படுத்த உலக கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.




ஆண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளத் தயங்காத பெண்கள், மீசை வளர்ந்தால் ஏன் கிரீம் போட்டு நீக்குகிறார்கள்? - ராஜா


ஆண்களின் ஆடை எனத்தெரிந்தே அவர்கள் அதை அணிகிறார்கள்.

அணிந்துகொள்வதில் வசதி (சவுகர்யம்)

நாகரீகம்

கவர்ச்சி

சிக்கனம்

எனப் பல காரணங்களால் ஆண்களின் உடையை அணிகின்றனர். ஆனால் அடிப்படையில் தாம் பெண்கள் என்பதை மறப்பதுமில்லை; மறைப்பதுமில்லை. எனவேதான் முகத்தில் வரும் தேவையற்ற முடியை நீக்குகிறார்கள்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆர்சனிக் என்ற நச்சுத்தன்மையுடைய பொருள்களைக் கொண்டு பெண்கள் தங்களின் தேவையற்ற முடிகளைக் களைந்துள்ளார்களாம்.

ஆமாம் இதைப்போய் பெரிய தேசியப் பிரச்சனைபோல் கேட்டுள்ளீர்களே?


 

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்