இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஜோதிபாசு உடல் நலம்: தலைவர்கள் சந்திப்பு!

E-mail அச்செடுக்க
உடல் நலம் இன்றி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் உடல் நலம் முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஜோதிபாசு கொல்கத்தாவில் உள்ள AMRI மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜனவரி 1ஆம் தேதி முதல் அவர் இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜோதிபாசுவை நேரில் சந்திப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் டில்லியில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்றார். வியாழக் கிழமை மதியம் 1 மணி அளவில் அம்ரி மருத்துவமனைக்குச் சென்ற மன்மோகன் சிங், அங்கு ஜோதிபாசுவை சந்தித்தார். அவருடன் மத்திய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜியும் சென்றிருந்தார். பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு திரும்பி விட்டார்.

கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான ஜோதிபாசுவை பிரகாஷ் கரத், பிருந்தா கரத், சீதாராம் யெச்சூரி, ஷியாமல் சக்கரவர்த்தி ஆகியோரும் வியாழக் கிழமையன்று சந்தித்தனர். பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவும் இன்று மருத்துவமனை சென்று ஜோதிபாசுவை சந்தித்தார்.

பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் வருகையை அடுத்து, மருத்துவமனையை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத் தடுப்புப் போலீசார் உள்ளிட்ட காவல் படையினர் அந்தப் பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்