இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக போலியோ இல்லாத தமிழகம்!

E-mail அச்செடுக்க
குழந்தைகளைத் தாக்கி கைகால்களைப் பாதிக்கும் போலியோ நோய் தடுப்பு முகாம்கள் ஆண்டு தோறும் ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் நாடுமுழுவதும் நடத்தப்படுகிறது. தமி‌ழகத்தில் 40,399 மையங்கள் மூலம் போ‌லியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செ‌ய்யப்பட்டுள்ளது. வரும் 10.1.2010 மற்றும் 7.2.2010 ஞாயிற்றுக் கிழமைகளில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நாடு முமுவதும் நடத்தப்பட உள்ளன.

தமி‌ழகத்திலும் சிறப்பு முகாம்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செ‌ய்யப்பட்டுள்ளன.ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மேற்கண்ட முகாம் நாட்களின்போது போலியோ சொட்டு மருந்து கூடுதலாக வழங்கப்படும்.

போலியோவை நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்க போலியோ முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம், தமி‌ழ்நாட்டில் தொடர்ந்து ஆறாம் ஆண்டாக போலியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனினும் பீகார், உத்தர பிரதேசம்  போன்ற வடமாநிலங்களில் போலியோ  வைரஸால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கிருந்து தமிழகம் வரக்கூடியவர்களால் போலியோ நோ‌ய்க் கிருமிகள் பரவும் வா‌ய்ப்புள்ளதால்,இவ்வாண்டும் போலியோ தடுப்பு சிறப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

மக்கள்நலன் கருதி சொட்டு மருந்து முகாம்கள் தமி‌ழ்நாடு முழுவதும் வசிப்பிடப்பகுதிகளுக்கருகே அமைக்கப்பட்டுள்ளன. இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பெற்றோர்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் போலியோ முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“சொட்டு மருந்து கொடுப்போம்; போலியோவை ஒழிப்போம்; குழந்தை நலம் காப்போம்” எ‌ன்று ம‌க்க‌ள் ந‌லவா‌ழ்‌வு‌த்துறை அமை‌ச்ச‌ர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்

போலியோ சொட்டு  மருந்து முகாம் (ஜன-10,2010 மற்றும் பிப்-7,2010)
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்