இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நடுரோட்டில் உதவி ஆய்வாளர் உயிருக்குப் போராட்டம் - வேடிக்கை பார்த்த அமைச்சர்கள் - (வீடியோ இணைப்பு)

E-mail அச்செடுக்க

நேற்று முன்தினம் ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர் வெற்றிவேல் சில மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார். அவர் வெட்டுப் பட்டு நடு ரோட்டில் கிடந்தபோது  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம்  , விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் ஆகியோர் அந்த வழியே வந்தனர் . அவர்களைக் கண்டதும் கொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர் .

வெட்டுப்பட்டு உயிருக்குப்  போராடிக் கொண்டு இருந்த வெற்றிவேலை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்   யாரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு  செல்ல முயற்சி செய்ய வில்லை . அவர்கள் அனைவரும் இலவச ஆம்புலன்ஸ் 108 க்காக காத்துக் கொண்டு இருந்தனர் . சிறிது நேர தாமதத்திற்குப் பின் அமைச்சர் மைதீன் கானின் பாதுகாப்பு வேனில் ஏற்றி சென்றனர் .வெற்றிவேல்  தண்ணீருக்காக பரிதவித்த போது தண்ணீர் கொடுத்த  ஒருவர்  வெற்றிவேலின் ரத்தம் எங்கே தன் மீது தெறித்து விடுமோ என்ற அச்சத்தில் வெற்றிவேலுக்கு தண்ணீர் கொடுத்தது மனிதாபிமானம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை வரவழைத்தது .

இந்நேரம்.காம் வாசகர்களுக்காக NDTV யின் வீடியோ இங்கே அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Dim lights

வெற்றிவேலை  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும், போலீஸாரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .வெற்றிவேல் ஒரு கால் துண்டிக்கப் பட்ட நிலையில்  சாலையில் புரண்டு வரும் காட்சியும்,  அமைச்சர்கள் பன்னீர் செல்வம், மைதீன்கான் ஆகியோர் சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கும் வீடியோ  காட்சியும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு போராடிக்  கொண்டிருந்த வெற்றிவேலைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனினும் இது குறித்து தெரிவித்த திருநெல்வேலி ஆட்சியர் ஜெயராமன் சில வெடிக்காத குண்டுகள் அவர் அருகே கிடந்ததால் உடனே எங்களால் அவர் அருகே செல்ல  முடிய வில்லை என்றும் இருப்பினும் 10 நிமிடமே ஆம்புலன்சுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் .

கருத்துக்கள் (10)Add Comment
0
...
எழுதியவர்: sivakumar, January 09, 2010
enna kodumai nada?sudukada?eathu???????smilies/sad.gif
0
...
எழுதியவர்: SK, January 09, 2010
Dismiss the minister and the collector. Forget about the responsibility. They don't have humanity. why do they need to be in a responsible post?
0
...
எழுதியவர்: ரகு, January 09, 2010
மனிதாபிமானம் அற்ற அமைச்சர்கள் ,அதிகாரிகள் ,வேடிக்கைப்பார்த்த மக்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.
உயிர்போவதை வேடிக்கைப்பார்க்கும் அளவுக்கு தமிழன் தாழ்ந்துப்போனது மனவருத்ததையளிக்கிறது.
0
...
எழுதியவர்: Panjamurthy, January 09, 2010
Immediately dismiss the ministers and district collector without inquiry?. Where is the chief ministers of Tamil Nadu (Mr.Karunanidhi) and what they are doing? Those are public servant without humanity? where is deputy CM? (Mr.Stalin) should be punish those ministers immediately otherwise your are not getting any single seat in coming public election.
0
...
எழுதியவர்: ஷமீம், January 10, 2010
வன்மையாக கண்டிக்கத்தக்க செயல்.

கொள்ளையடித்தாலும் மக்களுக்கு நல்லப்பல சேவைகள் ஆற்றி வருவதால் திமுக தலைமையிலான கருணாநிதியின் அரசே அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்படும் என்றொரு நிலை தற்பொழுது தமிழகத்தில் நிலவி வருகிறது.

அது நடப்பதும் நடக்காமல் இருப்பதும் இந்தச் சம்பவத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையப் பொறுத்து இருக்கிறது.

முதல் கட்டமாக மனிதாபிமானமற்ற அந்த இரு அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்வதோடு, தங்களின் கடமையைச் செய்ய மறந்த காரணத்திற்காக கிரிமினல் குற்றமும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே பேச்சு!

இல்லையேல், வரும் தேர்தலில் இந்தச் சம்பவம் திமுகவிற்கு எதிராக வீசப்போவது உறுதி!
0
...
எழுதியவர்: noorul ameen, January 12, 2010
It really cant imagine the collectors and the minister should be punishable other wise it will happen to their children also goverment should take necessary steps other wise god will give correct judgement to them
0
...
எழுதியவர்: amir, January 12, 2010
makkale
ivargal manithargal illai miruhangal, matra miruham abathill matikondal udanae adutha miruham uthavi seyyum , ivargal miruhathai vida kedukettavargal
0
...
எழுதியவர்: xxx, January 12, 2010
We all are talking about only ministers, government servants & public. What about news reporters, i think they all are in human category. But my thinking is wrong when i saw the videos.

At least one of the reporters should take action to save his life. According to my knowledge he is the worst one compare to others. Reporters plan to earn more and more money for this kind situation. They are not ready to help who one is attacked by unknown criminals.

Same time i not supporting to ministers, government servants and public. They also should punished by our government.

But final thing is now a days humanity reduce day by day. Every one wants to earn money any thing will happen to any body. This is the only concept.

Think about your final breath. Think about your 6ft, land, Think about your funeral day. Please think We are in the same situation what will you expect?

Try to help us. Dont think to do this kind of illeagl activities. Please

Take care of our human and humanities.

Try to love our neighbours, Always keep with good friends, Adjust with your wifes, Showing your love in your parents, maintain good relation with your relations, Your life will be move smooth, peace and joyful.

Thanks.
0
...
எழுதியவர்: பனங்காட்டூர் மு.அப்துல் ஹலீம் , January 12, 2010
இது மிகபெரிய மனித குல வன்கொடுமையாகும், ஒரு உயிர் துடித்துக்கொண்டு இருக்கும்போது ஓடிப்போய் காப்பாற்றுவது மனிதசெயல், அதனை வேடிக்கை பார்த்து நிற்பது அரக்க செயல். இரு அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியாளரும் தண்டிக்கப்பட வேண்டும்
0
...
எழுதியவர்: mushtaq rahman, January 13, 2010
இது மிகபெரிய மனித குல வன்கொடுமையாகும், ஒரு உயிர் துடித்துக்கொண்டு இருக்கும்போது ஓடிப்போய் காப்பாற்றுவது மனிதசெயல், அதனை வேடிக்கை பார்த்து நிற்பது அரக்க செயல். இரு அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியாளரும் தண்டிக்கப்பட வேண்டும்


கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்