இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கோவையில் புதிய பிராந்திய அறிவியல் மையம்

E-mail அச்செடுக்க
கோவையில் ரூ.6.5 கோடி மதிப்பில் பிராந்திய அறிவியல் மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகள் 2011-ம் ஆண்டில் நிறைவு பெறும் என்றும் மத்திய கலாச்சாரம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள அறிவியல் மையங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் திட்டத்தின் கீழ் புதிய அறிவியல் மையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான இடத்தை அளிப்பதுடன் இதனை அமைப்பதற்கான செலவில் 50 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்கும்.

இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 9 மாநிலங்களில் பிராந்திய அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கோயம்புத்தூரில் ரூ.6.5 கோடி மதிப்பில் புதிய பிராந்திய அறிவியல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2011-ம் ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்