இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கூட்டணிக்கு ரெடி - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

E-mail அச்செடுக்க

தேமுதிக செயற்குழு மற்றும்  பொதுக்குழு கூட்டம் மதுரவாயலை அடுத்த வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய செயற்குழுவுக்கு தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

கட்சித் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட  250 பேர் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 2700 பொதுக்குழு  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன . அதில் முக்கியமான ஒன்று தேமுதிகவுடன் இணைத்து செயல்பட விரும்பும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அதிகாரம் அளிக்கப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது . இதுவரை மக்களுடனும் , கடவுளடனும் தான் கூட்டணி என்று பேசி வந்த தேமுதிக தற்போது கூட்டணி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது .

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: M.DHANAPAL., January 09, 2010
desiya murpokku dhiravida khazagam took deside to get alliance with other parties tie up

it is very good desition to good fortune.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்