"இணையதளம் மூலமான கலாசார சீரழிவு, தமிழகத்தில் இளைய தலைமுறையை பாதித்து வருவதால், ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று(சனிக்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார் பேசும்போது, "இணையதளம் மூலம் பல்வேறு உபயோகமான தகவல்களைப் பெறுவது சாத்தியமாகியுள்ளது. அதேவேளை கலாசாரத்தைச் சீரழிக்கும் ஆபாச இணையதளங்களும் உள்ளன. சீனாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதைப் போல இத்தகைய ஆபாச இணையதளங்களுக்கு மட்டும் தடை விதிக்கலாம். மத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் தமிழகத்தைச் சேர்ந்தவரே.
அவர் மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் அதிக முதலைகள் உள்ளன. வெள்ளப் பெருக்கு காலத்தில் ஊருக்குள் முதலைகள் புகுந்து மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குகின்றன. எனவே கொள்ளிடம் பகுதியில் உள்ள முதலைகளைப் பிடித்து முதலைப் பண்ணை அமைக்கலாம். இப்பகுதியை சுற்றுலா மையமாகவும் மாற்றலாம்.
பள்ளிக் கல்வி இயக்குநரகம் மூலமாக பட்டதாரி தமிழாசிரியர்கள் நேரடி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

எழுதியவர்: akam, January 10, 2010
எழுதியவர்: younus, January 10, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|




