இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

எங்களுக்கு நீதி வேண்டும் - காங். எம்.எல்.ஏ போர்கொடி!

E-mail அச்செடுக்க

"சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைத் தொலைகாட்சிகளில் காட்டும் போது எங்களைக் காட்டுவது இல்லை; கேமராவை எங்கள் பக்கம் திருப்பி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்" ""தொலைக்காட்சிகளில் எதிர்க்கட்சியினரை காட்டுவது இல்லை'' என்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் சட்டப்பேரவையில் புகார் தெரிவித்தார்.

நேற்று(சனிக்கிழமை) கேள்வி நேரம் முடிவுற்றப் பின் காங்கிரஸ் எம்.எல்.ஏ மேற்கண்ட பிரச்சனையைக் எழுப்பினார்.

எம்.எல்.ஏ ஞானசேகரன் பேசும் போது, ""எதிர்க் கட்சிகளின் உரிமைகளைக் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. சட்டப்பேரவையில் நாங்கள் பேசுவதை தொலைக்காட்சிகள் காட்டுவது இல்லை. ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் பேசுவதே செய்தித் துறை மூலமாக தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

சட்டப் பேரவை செயல்பாடுகளைத் தொலைக்காட்சியில் முழுமையாக வெளியிட வேண்டும். நாங்கள் பேரவையில் பேசுகிறோமா? இல்லையா? என்று வீட்டில் உள்ளவர்களும், தொகுதியில் உள்ளவர்களும் கேட்கும் நிலை உள்ளது. எங்கள் பக்கமும் கேமராவைத் திருப்பி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். பேரவையில் குழப்பம், சண்டை ஏற்படும் போது காட்டுகிறார்கள்'' என்றார்.

எம்.எல்.ஏ ஞானசேகரனின் கோரிக்கைக்குப் பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ""உங்கள் பக்கம் கேமராவைத் திருப்புவதன் மூலம் நீதி கிடைக்கும்'' என்று நகைசுவையாக குறிப்பிட்டார். அப்போது சட்டப் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்