இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இந்திய ஆட்சிப் பணிகள் தேர்வு 2010: விண்ணப்பிக்க கடைசி நாள் பிப். 1

E-mail அச்செடுக்க
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கான இந்திய ஆட்சிப் பணிகள் தேர்வு 2010 வரும் மே மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வில் பங்கேற்ற விரும்புவோர் குறிப்பிடப்பட்ட தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அஞ்சலகங்களில் இருந்து அதற்கான பொது விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்ப படிவங்களை பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின், விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அஞ்சலகங்களில் உள்ள அஞ்சல் அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணைய விண்ணப்ப விநியோக கண்காணிப்பு மையத்தை 011-2338 9366 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம், தோல்பூர் ஹவுஸ், ஷாஜகான் ரோடு, புது தில்லி-110 069 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் அல்லது கூரியர் மூலமாக பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எனினும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அல்லது அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இது தொடர்பாக ஏதேனும் தகவல்கள், வழிகாட்டுதல்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்படுவார் மத்திய பணியாளர் தேர்வாணையத்தை 011-2338 5271, 2338 1125, 2309 8543 ஆகிய தொலைபேசி எண்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி தொடர்பு கொள்ளலாம். இந்தத் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் பதிவு தொடர்பான தகவல்கள், தேர்வு மையம் மற்றும் விவரங்களை ஆணையத்தின் www.upsc.gov.in இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்