இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பென்னாகரம் - பா.ம.க. வேட்பாளரை அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

E-mail அச்செடுக்க
பென்னாகரம் தொகுதிகயில் அனைத்துக் கட்சிகளும் பா.ம.க. வேட்பாளர் தமிழ்க்குமரனை ஆதரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது :

பொதுவாக இடைத்தேர்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியைச் சார்ந்தவர்களையே இடைத்தேர்தல் நடத்தாமல் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இடைத்தேர்தலில் பண நாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை காக்க விரும்பும் கட்சிகள் பா.ம. க.வை ஆதரிக்க வேண்டும். வேட்பாளரை அறிவித்து விட்டோம். எனவே எங்கள் வேட்பாளரை ஆதரியுங்கள் என நான் கேட்கவில்லை.

1991 தேர்தலில் அந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டு பா.ம.க. 32 ஆயிரத்து ஓட்டுகள் வாங்கியது. 1996-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் மீண்டும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

2006-ம் ஆண்டு தேர்தலில் நிர்பந்தத்தின் காரணமாக கூட்டணி கட்சிக்கு விட்டு கொடுத்தோம். இப்போது நாங்கள் எந்தக்கூட்டணியிலும் இல்லை.

பா.ம.க.வின் செல்வாக்கு அடிப்படையில் ஆதரவு கேட்கிறேன். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் சந்தித்து பேசும் திட்டம் இல்லை. எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருமங்கலம் பார்முலாவை போல் நாங்கள் பென்னாகரம் பார்முலாவை உருவாக்கி இருக்கிறோம். 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ம.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துக்கள் (2)Add Comment
0
...
எழுதியவர்: வீர வன்னியன், February 10, 2010
பா.ம.க இங்கே வெல்வது உறுதி!! மற்ற கட்சிகளின் துரோக செயல்களை கண்டு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம். எங்க்ள் அய்யா சொல்லியதைப்போல 30000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று பா.ம.க வின் வலிமையை நிலைநாட்டுவோம்.
0
...
எழுதியவர்: ராமதாஸ், February 10, 2010
அய்யோ, என்னாமா கனவு காண்றாங்கப்பா. எங்கள் வருங்கால தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் இத்தொகுதியிலும் அமோக வெற்றி பெறும். அடுத்த முதல்வர் எங்கள் தலைவர் தான்

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்