இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

AC இல்லாத விமான பயணம் - பயணிகள் ஆத்திரம்

E-mail அச்செடுக்க

ஸ்பைஸ் ஜெட்டிற்கு சொந்தமான பெங்களூரிலிருந்து அஹமதாபாத் செல்லும் விமானத்தில் AC வேலை செய்யாததால் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால் பயணி ஒருவர் மயக்கமடைந்தார்.

பெங்களூரிலிருந்து சுமார் ஒன்றறை மணி நேரம் தாமதமாக புறப்பட்ட இவ்விமானத்தில், விமான நிலையத்தில் விமானம் இருந்த போதே AC வேலை செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விமானிகள் விமான பணிபெண்களை கேரோ செய்தனர். எனினும் விமானம் கிளம்பியவுடன் AC வேலை செய்யும் என்று கூறிய விமான பணிபெண்கள், பயணிகளை ,அமைதிப்படுத்தினர். எனினும் விமானம் கிளம்பிய பின்னரும் AC வேலை செய்யாததால் பயணிகள் அனைவரும் உடனடியாக விமானத்தை தரயிறக்கம் செய்ய கோரியதையடுத்து விமானம் மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. ஆண்கள் பல பேர் போதிய ஆக்ஸிஜன் இல்லாததால் தங்கள் மேலாடையை கழட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என்றும், பலருக்கு அவசரமாக ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

பின்னர் மும்பையில் AC சரி செய்யப்பட்டவுடன் விமானம் தனது சேருமிடமான அஹமதாபாத்திற்கு சுமார் 10 மணி நேரம் கழித்து சென்றது.


கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: sando, February 18, 2010
smilies/kiss.gifsmilies/cry.gifsmilies/wink.gif

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்