இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (27-01-2010)

E-mail அச்செடுக்க

 

 

 

சென்னை சங்கமம் - டிசம்பர் மாத சபா கச்சேரிகள் ஒப்பிடுக. - ஜோசப்

இயல், இசை, நாடகம் என்று தமிழை மூன்றாகப் பிரித்திருக்க, டிசம்பர் மாதக் கச்சேரிகளில் தமிழுக்கு துக்கடா இடம்தான் கிடைத்துக் கொண்டிருந்தது.

மறுபக்கம், தமிழர்களின் பாரம்பர்யக் கலைகள் அழிந்து கொண்டிருந்தன. அவற்றுக்குப் புத்துயிர் ஈட்டி, நகர மக்கள் பாரம்பர்யக் கலைகள் மீதான கவனத்தைச் செலுத்துவதில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ளதாகவே கருதுகிறேன்.

இனி டிசம்பர் மாதம் என்றால், சபா கச்சேரிகள் மட்டுமின்றி சென்னை சங்கம் என்பதுவும் மக்களுக்கு நினைவுக்கு வரும்.



 

விட்டுச்சென்ற பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் தொடர வேண்டும் என்று சொல்கிறாரே முதல்வர். ஏன் வேறு நபர்களால் தொடர முடியாதா? - பாக்யா
 


குடும்பச் சொத்தை குடும்பத்தைச் சார்ந்த ஒருவர்தான் நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணம் போலும்.



ஜெயலலிதா அவையிலிருந்து வெளியேறிய பிறகு அவர் நாட்டை விட்டே வெளியேறும் காலம் விரைவில் வரும் என்று நிதியமைச்சர் அன்பழகன் பேசியது எதைக் காட்டுகிறது? - கந்தசாமி

 

அன்பழகனுக்கும் அரசியல் பேசத்தெரியும் என்பதை.
 




பெண்களுக்கு ஏன் வழுக்கை ஏற்படுவதில்லை? - மாலதி கார்த்திகேயன்
 


உடல் அமைப்பு மாறுபாடே இதற்குக் காரணம்.

டைடெஸ்டோஸ்டெரோன் (சுருக்கமாக DHT) எனப்படும் ஹார்மோன்கள் மயிர் வளர்தல் / உதிர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

DHT ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவாக உள்ளன.

எனவேதான் பெண்களுக்கு வழுக்கை ஏற்படுவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆண் / பெண் குரல் வேறுபாட்டிற்கும் DHTதான் காரணமாம்.

 




பன்றிக் காய்ச்சல் முதலில் எப்போது கண்டறியப்பட்டது? - ரகு
 


1930களிலேயே அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சல் வந்துவிட்டதாம்.

1976ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நான்கு இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல், பின்னர் பன்றிக் காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். இதுவே மனிதர்களைத் தாக்கிய முதல் பன்றிக் காய்ச்சல் ஆகும்.

நீண்டகால இடைவெளிக்குப் பின் 2009 ஆம் ஆண்டில் மெக்சிகோவில் தொடங்கி உலகம் முழுவதும் பீதியைக் கிளப்பி வருகிறது இக்காய்ச்சல்.

 

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்