இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

புது டெல்லியில் கடுங்குளிருக்கு இதுவரை 550 பேர் பலி!

E-mail அச்செடுக்க

புதுடில்லி : தலைநகர் டில்லியில், கடும் பனிமூட்டம் காரணமாக, விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்துகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகார் ஆகிய மாநிலங்களில், குறைந்தபட்ச வெப்பநிலை சிறிது அதிகரித்து காணப்பட்டன. இதுவரை, வட மாநிலங்களில் கடுங்குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகார் ஆகிய மாநிலங்களில் சிறிது பனிமூட்டம் காணப்பட்ட போதும், குறைந்தபட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்து காணப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் மிக குறைந்த வெப்ப நிலையாக, அமிர்தசரசில் 2.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

ஜம்மு காஷ்மீரில் கடுங்குளிரில் இருந்து சிறிது நிவாரணம் பெற்ற போதும், ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியஸ் நிலவியது. ஜம்முவில் இந்த குளிர் காலத்தில் தான், முதல் முறையாக, இரவு நேர வெப்பநிலை இயல்பை விட சிறிது அதிகரித்து காணப்படுகிறது. இங்கு, அடுத்த சில நாட்களில் பனிப்பொழிவு ஏற்படலாம் என, வானிலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். டில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.8 டிகிரி செல்சியஸ் நிலவிய போதும், நேற்று காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 50 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பனிமூட்டம் காரணமாக, ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்