ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று முதல் திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு பொலிசார் உட்பட 18 பேர் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அத்தொகை குறைக்கப்பட்டு நான்கு பேர் மட்டுமே பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சியினர் பல்வேறு வழிகளிலும் பழிவாங்கப்பட்டு வரும் நிலையில் பிரதித் தலைவர் ஜயசூரியாவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




