புதுடெல்லி: சிமிக்கெதிரான தடையை நீக்கக்கோரி "சிமியின் மீதான தடை ஏன்? எத்தனை நாள்?" என்ற தலைப்பில் மாநாடு ஒன்று டெல்லியில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது அதில் முஸ்லிம் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிமி மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்தனர்.
பா.ஜ.க அரசு முஸ்லிம் விரோதப்போக்கு காரணமாக சிமி இயக்கதிற்க்கு தடை விதித்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற அரசு இந்த தடையை நீக்க வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் பேசிய டெஹல்கா எடிட்டர் அஜித் ஸாஹி கூறியதாவது சிமியின் பெயரால் ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் நாடுமுழுவதும் வேட்டையாடப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது: இவ்விஷயத்தில் பா.ஜ.க வும் காங்கிரஸும் ஒரேபோல் தான் செயல்படுகின்றன. ஊடகங்கள் சிமியின் பெயரால் பீதியை பரப்பி வருகின்றன. அதனால் எனக்கு பத்திரிகைகளை வாசிக்கவே பயமாக இருக்கிறது. ஏதாவது ஒரு இடத்தில் குண்டுவெடித்தால் சிமி தான் இதற்க்கு காரணம் என்று போலீஸும் பத்திரிக்கையும் கூறுவார்கள். ஆனால் பத்திரிக்கையை படித்து முடிக்கும்பொழுது நமக்கு கேள்விதான் மிஞ்சும்.
இந்நாட்டில் முஸ்லிம்கள் பீதியில் உள்ளனர். இந்நாட்டு மக்கள் தொகையில் 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களை பீதியில் ஆழ்த்திவிட்டு இந்நாட்டை எவ்வாறு முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும். இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.
சிமி தடைச் செய்யப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் அதன் மீதான தடையை நீக்கக்கோரும் மாநாடு கூட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




