இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

முஸ்லிம்கள் தொழுகைக்கு முன் துப்புரவு செய்ய நவீன கருவி!

E-mail அச்செடுக்க
முஸ்லிம்கள் தொழுகைக்காக தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒளுச் செய்ய அவர்களுக்கு உதவி செய்யும் நவீன கருவியொன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

குறைந்த அளவே தண்ணீரைப் பயன்படுத்தி ஒளுச் செய்ய இது உதவும் என்று இதைக் கண்டுபிடித்த  மலேசிய நிறுவனம் AACE டெக்னாலஜீஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் பச்சை நிற உபகரணத்தில் தொட்டியுடன் தானியங்கி உணர்விகள் (Automatic Sensors) உள்ளனவாம். மேலும், ஒளுவின் போது, குர்ஆனிலிருந்து பிரார்த்தனை வசனங்களையும் இது ஒலித்தவண்ணம் இருக்குமாம்.

"வருங்காலங்களில் நீர் வீணடிப்பைத் தடுப்பதும், நீரைச் சேமிப்பதும் இன்றியமையாததாக இருக்கும்" என்று கருத்து தெரிவித்த நிறுவனத் தலைவர் அந்தோணி கோமஸ், இந்தக் கருவியின் மாதிரி செயற்பாட்டை கோலாலம்பூரில் நிகழ்த்திக் காட்டினார்.

ஆறுமாத காலங்களில் சந்தைக்கு வர இருக்கும் இந்தக் கருவி  தொடக்கத்தில் 3000 முதல் 4000 அமெரிக்க டாலர்கள் வரை விலை வைக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த ஹஜ்ஜின் போது, ஏறத்தாழ இருபது இலட்சம் மக்கள் ஒளுச் செய்ய, தினமும்,  சுமார் 50 இலட்சம் லிட்டர்கள் நீரைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அந்தோணி, இந்த உபகரணத்தால் அதில் 40 இலட்சம் லிட்டரை, தினமும் மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

துபாய் விமானநிலையத்தில், விரைவில், இந்தக் கருவிகளை நிறுவ உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- ரியாத்-திலிருந்து இப்னு ஹம்துன்
கருத்துக்கள் (3)Add Comment
0
...
எழுதியவர்: rashid, February 03, 2010
very useful
0
...
எழுதியவர்: Babu, February 03, 2010
But for this invention also, An "Anthony Gomez" came forward. It is a pity
0
...
எழுதியவர்: abulbazar, February 07, 2010
பயனுள்ள கருவி.தண்ணீரை சேமிக்க இந்த கருவி பயனுள்ள ஓன்று.அதன் விலை தான் யானை விலை.
புதிய கண்டுப்பிடிப்புக்கு பாராட்டுகள்.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்