இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நடிகர் வி.எம்.சி. ஹனீபா மரணம்!

E-mail அச்செடுக்க
மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் செவ்வாய்க் கிழமையன்று சென்னையில் மரணமடைந்தார்.

சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹனீபாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க் கிழமை மாலை 3 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

1951ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தவர் ஹனீபா. அவரது இயற்பெயர் சலீம் அகமது கெளஸ். பி.எஸ்.சி தாவரவியல் படித்தவர். மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் இரட்டைக் குழந்தைகள் ஆவர்.

1979ம் ஆண்டு மலையாளப் படத்தில் நடிக்க ஆரம்பித்த அவர் தொடர்ந்து தமிழ், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்