ஏவுகணைத் தாக்குதலை தடுத்து நிறுத்தும் ஒரு புதிய தற்காப்புக் கட்டமைப்பை வளைகுடா பிரதேசங்களில் நிறுவுவதற்கான அமெரிக்கத் திட்டத்திற்கு ஈரான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
மத்தியக் கிழக்குப் பிரதேசத்தில் ஈரான் எதிர்ப்பு நிலையை உருவாக்க அமெரிக்கா முயல்வதாக ஈரானின் வெளியுறவுத் துறையின் பேச்சாளர் குற்றம் சாட்டினார்.
ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் உருவாக்கவில்லை என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாடிஜானி அவர்கள் தெரிவித்தார்.
ஈரான் அல்லது வடகொரியா தயாரிக்கக்கூடும் என்று கருதப்படும் தொலைதூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளைக் கண்டுபிடித்துத் தாக்கி அழிக்கவல்ல ராக்கெட்டுகளை அமெரிக்கா நேற்று திங்கட்கிழமை பரிசோதித்தது.
அமெரிக்காவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரானும் ஒன்று என்றும், தன் நாட்டைப் பாதுகாப்பதற்காக ஈரான் தாயாராகி வருவதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




