இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மோசடியான தேர்தல் முடிவுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து இறுதி வரையும் போராடுவோம் - சரத் பொன்சேகா

E-mail அச்செடுக்க

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளியிடப்பட்ட இறுதி முடிவு ஏற்றுக் கொள்ளப்படக் கூடிதல்ல என்று கூறி பிரதான எதிர்க்கட்சிகள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் சத்தியாக்கிரப் போராட்டத்தை நடாத்தின. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பிரதாக எதிர்கட்சிகள் இணைந்து இந்த மாபெரும் ஆர்ப்பட்ட எதிர்ப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, சோமவங்க அமரசிங்க, டில்வின் சில்வா, ரவூப் ஹக்கீம், மனோ சணேசன், திஸ்ஸ அத்தநாயக, அநுர குமார திசாநாயக்கா உட்பட பிரதாக எதிர்த்தரப்பு கட்சித் தலைவர்களுடன், ஜெனரல் சரத் பொன்சேகாவும் இங்கு உரையாற்றினர். இந்தக் கூட்டத்திற்கு பொலிசார் ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரம் வழங்க மறுத்த நிலையிலும் இந்த எதிர்ப்புக் கூட்டம் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்று எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்ற ஹைட்பார்க் மைதானத்தை அடைந்தனர்.

தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. நிஜமான மக்கள் வெற்றி எனக்கே கிடைத்து. அதனை இந்த அரசு பறித்தெடுத்துக் கொண்டுள்ளது. இதற்கெதிராக உயிரைப் பணயம் வைத்து இறுதி வரையும் போராடத் தயாராக உள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இங்கு கூறனார். அத்துடன் கம்பஹா மாவட்டச் செயலகத்திற்கருகிலிருந்து எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு ஒன்றையும் மக்களுக்குக் காட்டினார்.


கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்