இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையேற்றம்

E-mail அச்செடுக்க
எரிபொருட்களின் விலைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட' கிரித் பரேக் கமிட்டி' மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவிடம் தனது அறிக்கையை நேற்று சமர்பித்தது.அதில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் அதிகரிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
மேலும்  பெட்ரோலிய பொருட்கள் தொடர்பாக, அரசின் தற்போதைய விலை நிர்ணய கொள்கை  நிலையானது அல்ல என்றும் தற்போது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் சில்லரை விலையை நிர்ணயித்துக் கொள்கின்றன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமானால் எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், இந்த இழப்பீட்டை சரி செய்ய அரசு மானியம் வழங்க வேண்டிய  சூழ்நிலை ஏற்படும் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட அளவு, அரசு தொடர்ந்து மானியம் வழங்கலாம் என கிரித் பரேக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்