இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கருணாநிதி என் குரு : விஜய டி. ராஜேந்தர்

E-mail அச்செடுக்க
கருணாநிதி எனது குரு என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்  கூறியுள்ளார். வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கை பிரச்னைக்கு காங்கிரஸ்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கருணாநிதி எனது குரு. இலங்கை பிரச்னையில் அவருக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகதான் சிறுசேமிப்பு துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.

விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். சமச்சீர் கல்வி போல போக்குவரத்து கட்டணத்திலும் சமச்சீர் வேண்டும்.

வளர்ந்த நாடுகளே வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தவில்லை. இயந்திர வாக்குப் பதிவு இருக்கும் வரை ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.

திரையுலகத்துக்கு வீடு கட்டிக் கொள்ள முதல்வர் இடம் வழங்கினார். திரையுலகம் முதல்வருக்கு பாராட்டு கூட்டம் நடத்துகிறது. நடிகன் என்ற முறையில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். திருட்டு விசிடி குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

அரசியலில் குழப்பமான சூழ்நிலை உள்ளது. எனது சுயமரியாதையை விட்டு கொடுத்து நானாக போய் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டேன்.

கட்சிக் கொடியை கருப்பு, நீலம், சிவப்பு வண்ணத்தில் மாற்றி இருக்கிறோம். இவ்வாறு ராஜேந்தர் கூறினார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்