இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

E-mail அச்செடுக்க
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் பலன்கள் அடுத்த சில வாரங்களில் தெரியும்’ என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் அளித்த பேட்டியில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதகாகவும், அதன் பலன்கள் அடுத்த சில வாரங்களில் தெரியும் என்றும் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகளின் விவரங்களை  தெரிவித்தனர் என்றார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்