இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நடிகர் ஜெயராம் வீடு மீது தாக்குதல்

E-mail அச்செடுக்க

தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, கும்பல் ஒன்று நடிகர் ஜெயராம் வீட்டை  சூறையாடியது. பிரபல நடிகர் ஜெயராம் சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், வளசரவாக்கம் ஜானகி நகர் என்.என்.லட்சுமி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் 30 பேர் கொண்ட கும்பல் ஜெயராம் வீட்டு முன்பு வந்தது. அப்போது, வீட்டில் ஜெயராமின் மனைவி பார்வதி, தாயார் தங்கம், வேலையாட்கள் கோகிலா, லட்சுமி, பூர்வஜா ஆகியோர் இருந்தனர். திடீரென அந்த கும்பல், வீட்டுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை தள்ளி விட்டு, கற்கள், உருட்டுக்கட்டைகளை கொண்டு கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். போர்டிகோவில் நின்றிருந்த காரையும் அடித்து நொறுக்கினர். வீட்டுக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில், முன்அறையில் இருந்த ஜெயராமின் அலுவலகம் தீக்கிரையானது. இதைப் பார்த்து, வீட்டுக்குள் இருந்த ஜெயராமின் மனைவி, தாயார் கூச்சல் போட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய கும்பலை, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரட்டினர். இதில் 12 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் ‘நாம் தமிழர் இயக்க’த்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. தப்பி ஓடிய 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது, ஜெயராம் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள கோழிக்கோடுக்கு சென்றுள்ளா

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்