அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெரம்பலூர் மக்களவையின் முன்னாள் உறுப்பினர் ராஜரத்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த வியாழக்கிழமையன்று திருப்பூரில் இபுவருக்கு மாரடைப்பு ஏறபட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று மரணம் அடைந்தார். ராஜரத்தினத்தின் உடல் திருச்சியில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தற்போதைய மத்திய அமைச்சர் அ.ராசாவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜரத்தினம்.
பின்னர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராசாவிடம் தோல்வியடைந்தார். 2001ஆம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மரணம் அடைந்த ராஜரத்தினத்திற்கு மனைவி மற்றும் 3 வயதுடைய மகன் உள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




