நடிகர் ஜெயராம் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பிரபல இயக்குநரும் "நாம் தமிழர்" இயக்கத் தலைவருமான சீமானுக்கு எதிராக சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நடிகர் ஜெயராம் மலையாளத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதாக வெளியான தகவல்களை அடுத்து, நாம் தமிழர் இயக்கத்தினர் அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் தொடர்புடைய 12 பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் கூறி இருந்தனர். இந்நிலையில், இத்தாக்குதலை நடத்தத் தூண்டியதாக இயக்குநர் சீமான் மீது வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




