இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மீண்டும் மன்னிப்புக் கோரினார் ஜெயராம்

E-mail அச்செடுக்க
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழகப் பெண்களைப் பற்றி இழிவான வார்த்தைகளை நடிகர் ஜெய்ராம் தெரிவித்ததாக தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது.வழக்குகள் தொடரப்பட்டதுடன், வளசரவாக்கத்தில் உள்ள ஜெய்ராமின் வீடும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தி பேசவில்லை என்றும், மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன் என்றும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் கேரளத்தில் இருந்து சனிக்கிழமை சென்னை திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

""சென்னையில்தான் 18 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறேன். தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தினால் அது என் தாயை இழிவு படுத்துவதற்கு சமம் என நினைத்துக் கொள்பவன். டி.வி. பேட்டியில் நான் பேசிய வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன. நான் நடித்த படங்களில் இதுவரை தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகள் இல்லை. நான் பேசிய வார்த்தைகள் தமிழ்த் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் மீண்டும் கைகூப்பி வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார்.

புகார் வாபஸ்: தனது பேச்சுக்கு நடிகர் ஜெய்ராம் மன்னிப்புக் கோரியதையடுத்து, அவர் மீது அளிக்கப்பட்ட அவதூறுப் புகாரை வாபஸ் பெற உள்ளதாக சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் கே.பாலு அறிவித்துள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்