இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வருமான வரிச்சோதனையில் அரசு அதிகாரிகளிடமிருந்து ரூ. 500 கோடி பணம், நகை பறிமுதல்

E-mail அச்செடுக்க
மத்தியப் பிரதேசம்,​​ சத்தீஸ்கர் மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் ரூ.7.7 கோடி ரொக்கம் உள்பட ரூ.500 கோடி மதிப்புள்ள நகை மற்றும்​​ ஆவணங்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் ஐ.ஏ.எஸ்.​ அதிகாரிகளும்,​​ தம்பதியுமான அரவிந்த் ஜோஷி,​​ டினு ஜோஷி உள்ளிட்டோருக்கு தொடர்புடைய 13 இடங்களில் கடந்த 4 நாள்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

இதேபோல,​​ சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் விவசாயத் துறை செயலர் பி.எல்.அகர்வால் மற்றும் சிலருக்குத் தொடர்புடைய 7 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனைகளின் போது கணக்கில் வராத ரூ.7.7 கோடி ரொக்கம் உள்பட ரூ.500 கோடி மதிப்புள்ள நகை,​​ ஆவணங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(07/02/2010) அன்று தகவல் வெளியிட்டுள்ளன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்