இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அந்நியர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்- கமிஷனர் ஜாங்கிட்

E-mail அச்செடுக்க
சென்னை புறநகர் பகுதி வீடுகளில் தனியாகஇருக்கும் பெண்களைத் தாக்கி கொலை, மற்றும் கொள்ளை நடப்பது குறித்த புகார்கள் குறித்து கமிஷனர் ஜாங்கிட் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் பகலிலும், பிற நேரங்களிலும் முன்பின் தெரியாதவர்கள், முகவரி கேட்பது போலவோ அல்லது குடிநீர் கேட்பது போலவோ, வந்தால் வீட்டிற்குள் உடனே அனுமதிக்கவேண்டாம்.

உறவினர்களுக்கோ அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ தகவல் தெரிவித்து அவர்களை உடன் வைத்துக்கொண்டு அனுமதிக்க வேண்டும் புறநகர் பகுதிகளில் ரேசன் கார்டு மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது போல் நடித்து கொள்ளை நடப்பதாகவும் புகார்கள் வருகிறது.

சரிபார்ப்பு பணிகளுக்கு அரசுதுறை சார்பாக யாராவது வந்தால் அவர்களின் அடையாள அட்டையை சரி பார்த்து பேச வேண்டும். அப்படி உங்களுக்கு சந்தேகப்படும்படி இருந்தால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றார்
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்