இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மார்க்ஸிஸ்ட்(லெ) கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கொலை

E-mail அச்செடுக்க
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் நேற்றிரவு(07/02/2010) சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் இன்று தெரிவித்திருக்கின்றனர்.

ஜார்க்கண்ட மாநிலம் பாலமாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாஜன் அன்சாரி. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சிப் பிரமுகரான இவரை நோக்கி, நேற்றிரவு மோட்டார் சைக்களில் வந்த 3 பேர் சரமாரியாகச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சாஜன் உயிரிழந்தார்.

குற்றவாளிகளைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளதாக டிஎஸ்பி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பந்த் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்