இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்; 2 டிரைவர்கள் பலி; 50 பயணிகள் காயம்

E-mail அச்செடுக்க
கும்பகோணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தமிழக அரசு விரைவு பேருந்து ஒன்று நேற்று இரவு 11 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.
பேரூந்தை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் பாலசுப்பிரமணியன் (வயது 57) ஓட்டி வந்தார்.நள்ளிரவு 2.15 மணியளவில் பண்ருட்டி அருகே சூரக்குப்பம் அண்ணாநகர் மெயின் ரோட்டில் பேரூந்து வந்த போது சென்னையில் இருந்து மன்னார்குடிக்குப் பயணிகளை ஏற்றி வந்த தனியார் டிராவல்ஸ் பேரூந்து,, அரசு விரைவுப் பேரூந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் அரசுவிரைவு பஸ் டிரைவர் பாலசுப்பிரமணியன், தனியார் டிராவல்ஸ் பஸ் டிரைவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த சிவப்பிரகாசம் ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வண்டிகள், 10 அம்புலன்ஸ் வண்டிகள் வரவழைக்கப்பட்டன. பலியான டிரைவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ் (28), ஆனந்தி (26), சுகன்யா (26), வேல்முருகன், விஜய் (23) மாதவன் (28), சதாசிவம் பிள்ளை (44),தன லட்சுமி (26), குருமூர்த்தி (24), செந்தில் (30), மல்லிகா (40), அரசு பஸ் கண்டக்டர் குப்புசாமி (32), ரம்யா (21), வள்ளி மீனா (32), செந்தமிழ் செல்வன்(23) உள்பட 50 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர்.

இவ்விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான இரு பேரூந்துகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்