இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ரூ.1655 கோடி செலவில் “எக்ஸ்பிரஸ்” சாலை - ஜி.கே.வாசன்

E-mail அச்செடுக்க
சென்னை துறைமுகம்- மதுவாயல் இடையே அமைக்கப்படும் உயர்மட்ட எக்ஸ்பிரஸ் சாலை, மற்றும் எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டு திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.

இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சென்னை துறைமுக தலைவர் கேப்டன் சவான், எண்ணூர் துறைமுக தலைவர் வேலுமணி, மத்திய கப்பல்துறை செயலாளர் மோகன்தாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை துறைமுகம்-மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலை, எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்துதல், நிவாரணம் வழங்குதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மறுகுடி அமர்த்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு தற்போது கூடுதல் செலவும், கால தாமதமும் ஏற்பட்டுள்ளது.

எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டுத் திட்டத்தை ரூ.150 கோடி செலவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் கூடுதலாக திருவொற்றியூர்-பொன்னேரி -பஞ்சட்டி ஆகிய இடங்களுக்கு 4 வழி சாலை அமைப்பது உள்பட பல்வேறு புதிய பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால் இந்த சாலை மேம்பாட்டு திட்ட மதிப்பீடு ரூ.600 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. துறைமுகம்-மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலைக்கு ரூ.1655 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நிலம் கையகப்படுத்துதல், மற்றும் மறு குடியேற்றத்துக்கு ரூ.310 கோடி செலவிடப்படுகிறது. இந்த தொகையை சென்னை துறைமுகமும், தமிழக அரசும் சம பங்களிப்பாக வழங்கும் இது விரைவாக நிறைவேற்றப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் முடியும்.

இத்திட்டங்களை நிறை வேற்றுவதில் இருந்த சிறுசிறு தடங்கல்கள் நீங்கி விட்டன என்று அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்