முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக 1984-ம் ஆண்டு நடந்த வன்முறைகள் தொடர்பான வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க டெல்லி காவல்துறையும் சிபிஐயும் ஒப்புக் கொண்டிருக்கின்றன. இந்த நியமனம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட இடங்களில் சீக்கியர்களைக் குறிவைத்து வன்முறை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்முறை தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்குகளைக் கையாள அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், இது தொடர்பான வழக்கு விசாரணைகளை 6 மாதத்துக்குள் முடித்துக் கொள்ளுமாறு கீழ் நீதிமன்றத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 26 ஆண்டுகளைக் கடந்து விட்ட சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கு, இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




