இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

E-mail அச்செடுக்க
நடப்பு 2009-10ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. முந்தைய ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. மத்திய புள்ளியியல் நிறுவனம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி, 7.75 சதவீத வளர்ச்சி இருக்கும் என இடைக்கால பொருளாதார மறுஆய்வில் நிதியமைச்சகமும், 7.5 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என தனது காலாண்டு நிதிக் கொள்கை மறு ஆய்வில் ரிசர்வ் வங்கியும் மதிப்பிட்டிருந்தன. தற்போது மத்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் மதிப்பு இவற்றைவிடக் குறைவானதாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

எனினும், நடப்பு நிதியாண்டின் பிற்பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தைத் தாண்டி வேகமாக வளர்ச்சியடைகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்தப் புள்ளிவிரங்களின்படி, வேளாண்மை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் 0.2 சதவீதம் அளவுக்கு குறையும் எனத் தெரியவந்துள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்