முஸ்லிம்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பினை திங்கள்கிழமை மாநில அரசு வெளியிட்டது.மேற்கு வங்க மாநிலத்தில் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவின் கீழ் இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ரங்கனாத் மிஷ்ரா குழுவின் பரிந்துரையை அமல்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்பார்க்காமல் விரைந்து செயலாற்ற இந்த அரசு உத்தேசித்துள்ளது. இதற்காக மாநிலத்தில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
என்று தெரிவித்தார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




