இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க விசுவ இந்து பரிஷத் எதிர்ப்பு!

E-mail அச்செடுக்க
மேற்கு வங்க மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை விசுவ இந்து பரிஷத் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று விசுவ இந்து பரிஷத் கூறியுள்ளது.

இதர பிற்பட்டோர் பிரிவின் கீழ் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் மேற்கு வங்க கம்யூனிஸ்டு அரசு இந்து மதத்தில் நலிந்த பிரிவினராக உள்ளவர்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தில் அம்மாநில அரசு முஸ்லிம்களுக்கு வழங்கியிருந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறி, இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அதே நாளில், மேற்கு வங்க அரசு அதனைவிட அதிகமாக இட ஒதுக்கீடு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் அரசியல் செல்வாக்கை இழந்து வருவதால், அவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்