இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கூத்தாடிகளின் முதல்வர்?

E-mail அச்செடுக்க
தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களை கலைஞர் என்றும் அழைக்கப் படும் காரணத்தாலோ என்னவோ மாநிலத்தின் அனைத்து தரப்பினருக்கும் முதல்வரான முதல்வர், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  திரைப்படக்  கலைஞர்களின் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார்.

சன் தொலைக்காட்சி குடும்பச்சண்டையால் உருவான கலைஞர் தொலைக் காட்சியை அறிமுகப்படுத்தும்போது "தமிழை வளர்க்கவும் தமிழ் கலாச்சாரம் மேம்படவும் கலைஞர் தொலைக்காட்சி செயல்படும்" என்று பேசினார். மானாட மயிலாட என்ற தனித் தமிழ்ப் பெயருடன் சினிமா பின்னணியுடன் தமிழ் கலாச்சாரத்தைக் அசுத்தப்படுத்தியதில் கலைஞர் தொலைக்காட்சியே முன்னோடி!

சில மாதங்களுக்கு முன் தமிழகத்தை திரைப்படத் தயாரிப்புக்கான சொர்க்க பூமியாக மாற்றப்போவதாக அறிவித்தார். ஏற்கனவே தமிழ் பெயர் கொண்ட  'தமிழ்  திரைப்படங்களுக்கு'  வரிச்சலுகை என பகுத்தறிவுப்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில் ஜக்குபாய் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் முன்பே இணைய தளங்களில் வெளியானபோது துடிதுடித்து சைபர் குற்றங்களின் அடிப்படையில் ஓரிரு நாட்களிலேயே சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து மாபெரும் அழிவிலிருந்து(?) தமிழ் திரைப்பட எதிர்காலத்தைக் காத்தார்.

திருட்டு விசிடி விற்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டமியற்றி சாதனை படைத்துள்ளார். காப்புரிமை மீறல் என்ற வகையில் திருட்டு விசிடிக்கான தண்டனை சரியே என்றாலும் அனைத்து வகையான உரிமை மீறல்களுக்கும் சமமான தண்டனைகளை, திருடர்களைப் பிடிப்பதில் காட்டும் ஆர்வமும் இருக்க வேண்டும். ஒருபக்கம் வரிச்சலுகை இன்னொரு பக்கம் வரி ஏய்ப்பு! நாட்டிலேயே அதிக வரிபாக்கி வைத்திருப்பவர்களில் சினிமா நடிகர்களைவிட யாரும் உண்டா?

சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கருணாநிதிக்கு கடந்த வாரம் மேலும் ஒரு பாராட்டு விழா! எதற்காகப் பாராட்டு  என்றால் தமிழ்த் திரை உலகுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிய முதலமைச்சர் கருணாநிதி, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகுக்கும் பையனூர் அருகே குடியிருக்க இடம் வழங்கியிருக்கிறார். இதற்காக, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு நன்றி பாராட்டும் விழாவினை சிறப்பாக நடத்தியது.

வீடில்லாதவர்களுக்கு இலவச மனைத்திட்டத்திற்குப் போதிய அரசு நிலங்கள் இல்லாத சூழலில் கூத்தாடிகளுக்கு குடியிருப்பு வீடுகளுக்கு நிலம் ஒதுக்கி இருப்பது எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதுபோல் உள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரம், விலைவாசி உயர்வு, சேதுக்கால்வாய் எனப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தனக்குத்தானே விருது வழங்கியும் தன்னைப் புகழ்பவர்களுக்கு சலுகைகள் வழங்கியும் காலத்தைக் கடத்தாமல் முதல்வர் கருணாநிதி அவர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூத்தாடிகளின் முதல்வராகவே வரலாற்றில் அறியப்படுவார்.

ஆக்கம் : ஜமால், துபை
கருத்துக்கள் (7)Add Comment
..., குறைந்தப் பரிந்துரை கொண்ட கருத்து [காண்பி]
0
...
எழுதியவர்: ராயப்பேட்டைக்காரன், February 09, 2010
முதல்வர் தொகுதி பல்லிலிக்கிறது. திருவல்லிக்கேணி ஹைரோடு கடந்த ஒரு மாதத்திற்கும் முன் தோண்டப்பட்டு குண்டும் குளியுமாகவும் புளுதியுமாக இருக்கிறது. குழந்தைகளும் பொதுமக்களும் இதனால் பெரும் அவதியுறுகின்றனர். அதேபோல் இத்தொகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம்மான முறையில் இரவில் வாகனங்கள் தீக்கிறையாகுவதும்,வாகனத்தில் பெட்ரோல் திருட்டும் அதிகமாக உள்ளது. மூதல்வர் வாழ்க, அவர் கலைச்சேவை வளர்க.
0
...
எழுதியவர்: வீர வன்னியன், February 10, 2010
இன்றைய நிலைமையில் ஒரு கடைக்கோடி சினிமாக்காரனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்ற துறையில் சிறந்து வெற்றிபெற்ற வர்களுக்கும் கிடைக்குமா? ஒரு நடிகை எளிதாக முதல்வரை அனுகி அவர்க்ளது தேவைகளை பெற்றுகொள்ளுகிறார்கள் அதைப்போல சாதாரண ஒரு விவசாய, நெசவாளி, மீனவ மக்கள் முதல்வரை சென்று அனுகி பார்க்கமுடியுமா?

தமிழ்நாட்டில் உள்ள சாதாரண குடிமகனுக்கு பிரச்னைன்னா காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் செய்தும், கோர்ட்டிலும் காத்துக்கிடக்க வேண்டும். ஆனால் சினிமா துறையில் ராதிகா சரத்குமார் பட திருட்டு வி.சி.டி பிரச்னைன்னாலோ, வடிவேலு நிலப் பிரச்னைன்னாலோ, இவர்கள் கம்ப்ளைன்ட் கூட கொடுக்க வேணாம். முதல்வரிடம் சொன்னால் போதும. அவரும் உடனே போன் போட்டு எல்லாரையும் பிடிச்சு குண... See More்டாஸ் ல போட்டு விடுவார்கள்.

பல மக்கள் சொந்த வீடு இல்லாமல் இருக்கும் போது சினிமாக்காரர்களுக்கு மட்டும் அரசு நிலம் தருகிறது. அவர்களும் மாதம் ஒரு பாராட்டு விழா முதல்வருக்கு எடுத்து முடிந்தவரை லாபம் பார்க்கிறார்கள். கோடிகளில் படம் எடுப்பவர்களுக்கு அரசின் வரிவிலக்கு.இவர் என்ன மக்களின் முதல்வரா இல்லை சினிமாக்காரர்களுக்கு மட்டும் முதல்வரா.
0
...
எழுதியவர்: கணேஷ், February 10, 2010
குப்பத்துக்காரனுவளுக்கு வக்கிருந்தா ஒரு பாராட்டு விழாவும் ஒரு விருது அறிவிப்பும் செய்து பார்க்கட்டுமே
0
...
எழுதியவர்: Sultan-Jubail, February 17, 2010
Manada Mayilada Program... is very worst and it spoil our culture.
0
...
எழுதியவர்: hassan, February 19, 2010
sagotharar eluthiyirkura karuthu unmayileya varaverkkathakka vishayam.vegu seekirathil kalignar avargalukku KOOTHADI KALAIGNAR yenra virthu kodukkalam .
0
...
எழுதியவர்: buruhani, July 15, 2011
காமராஜை போல் ஒரு அரசியல் வாதி வரும் வரை தமிழ் மக்களுக்கு
விடிவு காலமே கிடையாது

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்