இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கும்பமேளாவில் பங்கேற்க வேண்டாம் : அமைச்சர்களுக்குப் பிரதமர் அறிவுரை!

E-mail அச்செடுக்க
கும்பமேளாவில் பங்கேற்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களையும் மிக முக்கியப் புள்ளிகளையும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

கும்பமேளாவில் பங்கேற்கும் மிக முக்கியப் புள்ளிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் இருப்பதாக உத்தர்காண்டு மாநில அரசு கூறியுள்ளதை அடுத்து, பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கும்பமேளாவில் பங்கேற்க வேண்டாம் என, பிரதமர் சார்பில் அமைச்சரவைச் செயலர் கே.எம். சந்திரசேகர் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 தேதி வரை நடைபெறும். இதில் 10 நாட்கள் மிகவும் சிறப்புடையவையாகக் கருதப்படுகின்றன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்