இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சலவையில்லா விரிப்புகள்: பயணிகள் புகார்!

E-mail அச்செடுக்க
ரயில்களிலுள்ள குளிர்சாதன கோச்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் வெள்ளை ​நிற உறையுடன் கூடிய தலையணை,​​ படுக்கை விரிப்பு,​​ போர்த்திக் கொள்ள கம்பளப் போர்வை ஆகியவை முறையாக சலவை செய்யப்படுவதில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

டிக்கெட் முன்பதிவு கட்டணத்துடன் படுக்கை விரிப்புக்கான கட்டணமும் சேர்த்தே பயணிகளிடம் வசூல் செய்யப்படுகிறது.​ ​ தலையணை உறைகள்,​​ விரிப்புகள்,​​ கம்பளப் போர்வைகள் ​தயாரித்து பயணிகளுக்கு விநியோகம் செய்ய தனியாருடன் ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.​ பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த விரிப்புகள்,​​ தலையணை உறைகள் முறையாக சலவை செய்யப்படுவதில்லை என பயணிகளிடையே புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக,​​ சென்னையில் இருந்து புறப்படும் நெல்லை விரைவு ரயில் பயணிகளுக்கு சலவை செய்த விரிப்புகளை இஸ்திரி செய்த மடிப்புக் கலையாமல் வழங்கப்படுவதாக ​கூறும் பயணிகள்,​​ மீண்டும் இதே ரயிலில் சென்னை செல்லும்போது முறையாக சலவை செய்யாத பயன்படுத்தப்பட்ட விரிப்புகள் அளிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒப்பந்ததாரர்கள் முறையாக விரிப்புகளை வழங்குகிறார்களா?,​​ துணிகள் முறையாக சலவை செய்யப்படுகின்றனவா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. புகார் வந்தால் மட்டுமே அதிகாரிகள் சோதனை நடத்துவதாக பயணிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.​ இப்போது குளிர்சாதன வசதி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளில் பெரும்பாலோர் வீட்டில் இருந்தே தலையணை மற்றும் விரிப்புகளை உடன் எடுத்து வருகின்றனர்.

குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளைத் தவிர இரண்டாம் வகுப்பு முன்பதிவு ​பெட்டிகளில்கூட பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் ரூ.20 கட்டணத்தில் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.​ இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை.​ அவ்வாறு வழங்கப்பட்டால் அது தவறான நடைமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்