இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பவார்-தாக்கரே சந்திப்பு அரசியல் இல்லை - காங்கிரஸ்

E-mail அச்செடுக்க

சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேயை,​​ மத்திய வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் மும்பையில் நேற்று(08/02/2010) சந்தித்தார்.​ இச்சந்திப்பை அரசியலாக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

ஐ.பி.எல்.​ அணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெறுவதற்கு பால்தாக்கரே ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.​ அதற்கு விளக்கம் அளித்து,​​ போட்டியைச் சுமுகமாக நடத்துவதற்கு தாக்கரேவின் ஆதரவு பெற பவார், பால் தாக்கரேயைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,​​ தாக்கரே-​ பவார் சந்திப்பு,​​ அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.​ சிவசேனாவை ராகுல் காந்தி தாக்கிப் பேசிவரும் நிலையில்,​​ காங்கிரஸ் கூட்டணியிலுள்ள பவார் தாக்கரேயைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது நிருபர்களிடம் கூறியதாவது:

"ஐ.பி.எல்.​ கிரிக்கெட் போட்டிகளை எந்த சர்ச்சையும் இன்றி நடத்த வேண்டும் என்பதற்காகவே தாக்கரேவை பவார் சந்தித்துள்ளார்.​ ஐ.பி.எல்.​ அணியில் ஆஸி வீரர்கள் இடம் பெறுவதற்கு கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்கவே இச்சந்திப்பு நடந்துள்ளது.

ராகுல் காந்தி சிவசேனாவை விமர்சித்துவரும் நிலையில் இச்சந்திப்பு தவறான சமிக்ஞையை ஏற்படுத்திவிடாதா என்று சிலர் கேட்கிறார்கள்.​ கிரிக்கெட் அமைப்பின் தலைவர் என்ற முறையில் மட்டுமே பவார் தாக்கரேவை சந்தித்துள்ளார்.​ இதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை." என்று ஷகீல் அகமது விளக்கம் அளித்தார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்