இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வடமொழி இருக்கும் இடத்திலெல்லாம் தமிழ் ஒலிக்க வேண்டும் - ஆதீனம்

E-mail அச்செடுக்க

"எங்கெல்லாம் வடமொழி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் ஒலிக்கலாம், அதற்காக எந்தத் தியாகத்துக்கும் தயாராக வேண்டும்" என்று திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி கூறியுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 12-வது உலக சைவப் பேரவை மாநாடு நடைபெற்றது. மாநாட்டு நிறைவு விழாவான நேற்று(08/02/2010) அன்று விழாவில் கல்ந்து கொண்டு, திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி அவர்கள் பேசும் போது, "தமிழ் திருமுறைகள் கோயில் கர்ப்பகிரகத்தில் நுழையக்கூடாது என்பது விதி அல்ல.​ எங்கெல்லாம் வடமொழி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் ஒலிக்கலாம்.​ அதற்காக எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.​ அனைவரும் திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதி வழிபட வேண்டும்.​ அப்போதுதான் நாடு வளம் பெறும்" என்று பேசினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்